வசிக்க இடமின்றி தவிக்கும் இந்து பைரவா இன மக்கள் அடிப்படை வசதிகள் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு!
ராணிப்பேட்டை, ஆகஸ்ட் 25 -
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், அல்லிக்குளம் அடுத்த நரசிங்க புரம் பகுதியில் இந்து பைரவா இன மக் கள் தினசரி கூலி வேலை செய்து வசித்து வருகின்றனர். இதில் சுமார் 20 குடும்பங் களைச் சேர்ந்தவர்கள் நிலையாக வசிக்க இடமின்றி மின்சார வசதி, தெரு வசதி, குழாய்இணைப்புகிடைக்காமல் ஏரிகுளம் அருகில் உள்ள இடத்தில் தற்காலிகமாக குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். அங்கு மழைக்காலங்களில் மழை நீர்
அதிக அளவு இவர்கள் தங்கி உள்ள பகுதி களுக்கு தண்ணீர் சூழும் நிலையில் உள் ளது. மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் வாழ் க்கை நடத்தி தவித்து வருகின்றனர்.இந்த நிலையில் விவசாய தொழிலாளர் சங்கத் தில் உறுப்பினர்களாக உள்ள இவர்கள் திங்களன்று (ஆக 25) சிபிஎம் தாலுகா குழு செயலாளர் ஆர். மணிகண்டன்தலை மையில் மாவட்ட ஆட்சியரிடம்பழங்குடியி னர் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி கோரிக்கை மனு அளித்துள்ளனர். உடன் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் ஏபிஎம். சீனிவாசன் கலந்து கொண்டார்
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக