மருத்துவ உதவி செய்து தரக்கோரி கால் உடைந்த 75 வயது மூதாட்டியை கலெக்டர் அலுவலகத்திற்கு தூக்கிக் கொண்டு வந்த பேரன்!
திருப்பத்தூர் , ஆகஸ்ட் 11 -
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அரப்பாண்டகுப்பம் பகுதியைச் சேர்ந்த பீம கவுண்டர் இவருடைய
மனைவி சீதம்மாள் இவருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளன. மேலும் சீதம்மாள் உயிரிழந்த நிலையில் இரண்டாவதாக ரத்தினம்மாள் (வயது 75) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள் ளார்.இந்த நடையில் பீமகவுண்டர் மற்றும் சித்தம்மாள் இருவரும் உயிரிழந்து விட்ட னர். மேலும் ரத்தினமாலுக்கு குழந்தை கள் ஏதுமில்லை இந்த நிலையில் ரத்தி னம்மாள் கடந்த சில தினங்களுக்குமுன்பு மருத்துவமனைக்குச் சென்று வீடு திரும் பிய நிலையில் கீழே விழுந்து கால் உடை ந்துள்ளது.மேலும் முதல் மனைவியின் நான்கு பிள்ளைகளும் ரத்தினம்மாளை பார்க்காத நிலையில் அவருடைய பேர னான மோகன் என்பவர் தனது பாட்டிக்கு கால் உடைந்து மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளார். மேலும் மருத்துவ உதவி செய்யக்கூட வழிவகை இல்லை எனவே தனது பாட்டிக்கு உடைந்த காலை சரி செய்ய மருத்துவ உதவி செய்யவேண் டும் என கூறி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மனு அளித்தார்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக