மானாமதுரை பள்ளி மாணவி மர்ம நபர்களால் கடத்தப்பட்ட செய்தி வெளியான நிலையில், சிசிடிவி காட்சிகளின் ஆதாரங்களோடு காவல்துறை மறுப்பு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் கால்பிரவை சேர்ந்த 17 வயது மாணவியை இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து வரப்பட்டு பெற்றோர்கள் இறங்கிவிட்ட நிலையில், பள்ளி மாணவியை காரில் பின்தொடர்ந்து வந்த முகமூடி அணிந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் பள்ளி நுழைவாயிலில் வகுப்பிற்கு சென்ற மாணவியை காரில் கடத்திச் சென்றதாகவும், கடத்திச் செல்லப்பட்ட அக்காரானது சிவகங்கை பேருந்து நிலையம் முன்பாக செல்லும்போது எதிர்பாராத விதமாக மாணவி தப்பிப்பதற்காக காரிலிருந்து வெளியே குதித்ததாகவும், கடத்தப்பட்ட காரில் இருந்து வெளியே குதித்த +2 மாணவியின் தலைமையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், பொதுமக்கள் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், பிளஸ் டூ மாணவி காரில் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக கடத்தப்பட்ட மர்ம கும்பலை பிடிக்க மானாமதுரை மற்றும் சிவகங்கை போலீசார் வலைவீசி தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் இவ்வாறான செய்திகள் சமூக வலைத்தளங்களில் திங்கட்கிழமை காலை முதலே வெளிவர தொடங்கியது.
இதற்கிடையில் பள்ளி மாணவி பேருந்து ஏறி சென்றதாகவும், பள்ளி மாணவியை யாரும் கடத்தவில்லை என்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறை தரப்பிலிருந்து முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அப்பள்ளி மாணவி பள்ளிக்கு வந்த நிலையில், மானாமதுரையில் இருந்து எதற்காக பேருந்தில் ஏறி சிவகங்கை செல்ல வேண்டும், அப்பள்ளி மாணவிக்கு எப்படி விபத்து ஏற்பட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஏன் கடத்தப்பட்டார் என்ற செய்தி வெளியானது அல்லது உண்மையிலேயே மாணவி கடத்தப்பட்டாரா என்ற பல்வேறு கேள்விகளுக்கு தற்போது விடை தெரியவில்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவின் வாக்குமூலத்தின் அடிப்படையிலும், காவல்துறையின் விசாரணை அறிக்கையின் அடிப்படையிலும் தான் மாணவியின் பெற்றோர் பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தெளிவு பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே முழுமையான விசாரணை முடியும் வரை இச்சம்பவம் குறித்து யாரும் எவ்வித கருத்துக்களையும் முன்வைக்கவோ, தெரிவிக்கவோ முடியாது என்பது தெளிவாகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக