சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குப்பைகளை சரிவர சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட வேல்முருகன்.
சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற அரசு உறுதிமொழி குழு தலைவர் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் திரு வேல்முருகன் அவர்களின் தலைமையில் அரசு உறுதிமொழி குழுவானது சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட போது திரு வேல்முருகன் அவர்கள் மருத்துவ கல்லூரி வளாகத்தில் குப்பைகளை சரிவர சீரமைக்க வில்லை என்றும், அதனை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனை அதிகாரிகளுக்கு கடுமையாக உத்தரவிட்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி பொற்கொடி இ.ஆ.ப, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு அண்ணா நகர் மோகன், திரு கோ, தளபதி, திரு ஜெயக்குமார், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ். மாங்குடி, சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் சஞ்சய் காந்தி, அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக