நங்கைமொழி அருகில் உள்ள சடையனேரி கால்வாய்க்குள் இறங்கி தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்காதன் தலைமையில், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மட்டுமல்லாது சாத்தான்குளம் உடன்குடி சுற்றுவட்டார பகுதி சார்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
போராட்ட களத்திற்கு வந்த நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் நாளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து சடையனேரி கால்வாயில் தண்ணீர் திறப்பதற்கான உறுதியான தகவலை அளிப்பதாகவும் அதுவரையில் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று இன்று நடைபெற்ற ஒரு நாள் உள்ளிருப்பு போராட்டமானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவாதக பா.ஜ.க சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிகாரிகள் கூறியபடி உரிய தீர்வு கிடைக்காத பட்சத்தில் மீண்டும் இந்தப் போராட்டமானது பல்வேறு கட்டங்களாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக