79 ஆவது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் சந்திரகலா அவர்கள் பங்கேற்பு!
ராணிப்பேட்டை , ஆகஸ்ட் 15 -
ராணிப்பேட்டை மாவட்டம் 79 ஆவது சுதந்திர தின விழா மாவட்ட ஆட்சியர் முனைவர் சந்திரகலா அவர்கள் தேசிய கொடி ஏற்றி பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 64 பயனாளிகளுக்கு2.20 கோடி மதிப்பீட்டுள்ளான அரசு திட்ட உதவிகளை வழங்கினார்கள்.பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 387 அரசு அலுவ லர்கள், காவலர்கள், மருத்துவர்கள், மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள்.
இந்திய திருநாட்டின் 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மை தானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் சந்திரகலா அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செய்து திறந்தவெளி வாகனத்தில் காவலர் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்கள்.
முன்னதாக ராணிப்பேட்டை அரசு மேல் நிலைப் பள்ளியில் உள்ள மகாத்மா காந்தியடிகளின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தா ர்கள் பின்னர் பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவல ர்கள், மருத்துவர்கள் காவலர்கள் என மொத்தமாக 387 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலை வர் அவர்கள் வழங்கி கௌரவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் ஐமன் ஜமால் , மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம் , திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சரண்யா தேவி , மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் செந்தில் குமரன் , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஏகாம்பரம் , வருவாய் கோட்டாட்சியர் ராஜராஜன் , துணை ஆட்சியர்கள் மீனா , அறிவுடை நம்பி, ரமேஷ் கீதாலட்சுமி,் இணை இயக்குனர் (வேளாண்மை) செல்வராஜ், துணை இயக்குனர் தோட்டக்கலை சிந்தியா , மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் வசந்த ராம்குமார் , மாவட்ட சமூக நலன் அலுவலர் பால சரஸ்வதி , தாட்கோ மேலாளர் அமுதா ராஜ் , மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஆனந்தன் , முன்னோடி வங்கி மேலாளர் ஸ்ரீ ராம்ஜி குமார் , ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பாதுகாப்பு திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மோகன், ஆட்சியர்கள் அலுவலக மேலாளர் ஜெயக்குமார் வட்டாட்சியர் ஆனந்தன் மற்றும் அரசு மருத்துவர்கள் செவிலி யர்கள் நகராட்சி ஆணையாளர்கள் பேரூராட்சி செயல் அலுவலர்கள் , காவலர்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
தமிழக குரல் சிறப்பு செய்தியாளர் சிவா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக