அரசுப் பள்ளியில் 79 ஆவது சுதந்திர தினம் விழா பள்ளி தலைமை ஆசிரியர் குழந்தைசாமி கொடி ஏற்றம்!
திருப்பத்தூர் , ஆகஸ்ட் 15 -
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கசிநாயக்கன்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நாட்டின் 79 ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் தலைமை ஆசிரியர் குழந்தைசாமி தலைமையில் நடைபெற்றது மேலும் இந்நிகழ்வில் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு 2024 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு ரொக்க தொகையாக 2000 ,1000, 500 என வழங்கப்பட்டது மேலும் வருகை பதிவேட் டில் 100% வருகை புரிந்தமாணவ மாணவி களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது மற்றும் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கும் சிறப்பு பரிசு வழங்கப்பட்டதுஇந்நிகழ்வில் முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டு 50,000 மதிப்புள்ள பரிசு பொருட்களும் நினைவு பரிசுகளும் வழங்கினார்கள். மாணவர்களின் கலை நிகழ்ச்சி கோ லாகலமாக நடத்தப்பட்டது மேலும் இப் பள்ளியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் தலைமை ஆசிரியர் குழந்தை சாமி அவர்களுக்கு பாராட்டுக்கள் குவி ந்து வருகிறது இந்நிகழ்வில் ஆசிரியர் கள் மாணவர்கள் மாணவிகள் முன்னாள் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
செய்தியாளர்
மோ. அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக