திருப்பத்தூர் மாவட்டம் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த ஊர் பொதுமக்கள்!
திருப்பத்தூர் , ஆகஸ்ட் 15 -
திருப்பத்தூர் மாவட்டம் கிராம சபா கூட்ட த்தில் செல்போன் டவர் அமைக்க தீர்மா னம் நிறைவேற்றியதால் கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்களால் பரபரப்பு திருப் பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த எர்ரம் பட்டி ஊராட்சி செட்டேரியான் வட்டத்தில் தனியாருக்கு சொந்தமான JIO செல் போன் டவர் அமைய இருந்தது.சுதந்திர தின விழாவை முன்னிட்டு இன்று நடை பெற்ற கிராம சபா கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் முருகம்மாள் வேலு செல் போன் டவர் அமைக்க தீர்மானம் நிறை வேற்றியதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ஊர் பொதுமக்கள் கிராம சபா கூட்டத்தை புறக்கணித்து கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் கூறுகையில் செல்போன் டவர் அமைவதால் அதிலிருந்து வெளி யேறும் கதிர் வீச்சுகளால் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், என 3000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் எனவே எங்கள் பகுதியில் செல்போன் டவர் வேண்டாம் எனவும் கூறினர்.இந்தியா முழுவதும் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் செல்போன் டவர் அமை க்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபர ப்பு காணப்பட்டது.
செய்தியாளர்
மோ அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக