79 ஆவது சுதந்திர தினம் விழா பாச்சல் ஆயுதப்படை மைதானத்தில் கொடியேற் றிய மாவட்ட ஆட்சியர்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2025

79 ஆவது சுதந்திர தினம் விழா பாச்சல் ஆயுதப்படை மைதானத்தில் கொடியேற் றிய மாவட்ட ஆட்சியர்!

79 ஆவது சுதந்திர தினம் விழா பாச்சல் ஆயுதப்படை மைதானத்தில் கொடியேற் றிய மாவட்ட ஆட்சியர்!
திருப்பத்தூர் , ஆகஸ்ட் ‌15 -

திருப்பத்தூர் மாவட்டத்தில் இந்தியாவின் 79வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்சிவசௌந் தரவல்லி தேசிய கொடி ஏற்றினார்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் 79வது சுதந் திர தினவிழாவை முன்னிட்டு திருப்பத் தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தர வல்லி தேசிய கொடி ஏற்றினார்இதனை யடுத்து மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தர வல்லி மற்றும் மாவட்ட காவல்கண்கா ணிப்பாளர் சியாமளாதேவி  ஆகியோர் சமாதான புறாவை பறக்கவிட்டு காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்று கொண்டனர்.
இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி திருப்பத்தூர் மாவட் டத்தில். சுதந்திரப் போராட்ட தியாகிகள் குடும்பத்தினருக்கு சால்வை அணிவித்து பரிசு பொருட்களையும். மாற்றுத்திறனா ளிகளுக்கு உபகரணங்கள் வழங்கப் பட்டது பணிகளில் சிறப்பாக பணியாற் றிய காவல் துறையினர் 28 பேருக்கும் 
மற்றும்  பல்வேறு துறையை சார்ந்த 309 பேருக்கு அரசு அலுவலர்களுக்கு பாரா ட்டு சான்றிதழ் வழங்கினார். இந்த சுதந் திர தின விழா 2025 ஆம் ஆண்டிற்கான நலத்திட்ட உதவிகள்  155பயனாளிக ளுக்கு மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தர வல்லி தலைமையில் இரண்டரை கோடி  மதிப்பிலான  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள், பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 செய்தியாளர். மோ.அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad