கர்ப்பிணி பெண்களுக்கு பரிசோதனை உபகரணம் வழங்கி 79 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம் !
ராணிப்பேட்டை , ஆகஸ்ட் 15 -
கர்ப்பிணி பெண்களுக்கு பரிசோதனை உபகரணம் வரகூர் துணை சுகாதார நிலையத்திற்கு பரிசளிப்பு!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே திமிரி அடுத்துள்ள காவனூர் இந்திரா நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளி யில் 79ஆவது இந்திய சுதந்திர தினவிழா வில் பள்ளி நிர்வாகி ஆர் சேட்டு தலைமை யிலும் பள்ளி கணக்காளர் எஸ் லட்சுமி கணினி ஆசிரியர் எம் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் எம் கோபி அனைவ ரையும் வரவேற்று பேசினார், காவனூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆர் ரஞ்சித் குமார் காவனூர் வணிகர் சங்க செயலா ளர் சி மோகனரங்கம் ஆகியோர் தலை மை யில் பள்ளி நிர்வாகி ஆர் சேட்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி கள் சிறப்பாக நடைபெற்றதை பெற்றோர் களும் பொதுமக்களும் பாராட்டினார்கள். பரிசு ,சிறப்பாக இயங்கி வரும் வரகூர் துணை சுகாதார நிலையத்திற்கு கர்ப்பி ணிபெண்களுக்கு தேவையான எடை பார்க்கும் மிஷின் இரத்த அழுத்தம் சரிப்பார்க்கும் மிஷின் ஆகியவற்றை காவனூர் இந்திரா நர்சரி மற்றும் தொட க்கப்பள்ளி நிர்வாகி ஆர் சேட்டு இந்திரா நர்சரி பள்ளியின் சார்பில் பரிசாக வரகூர் துணை சுகாதார நிலைய செவிலியர் ரபேகாவிடம் காவனூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆர் ரஞ்சித் குமார் காவனூர் வணிகர் செயலாளர் சி.மோகனரங்கம் வழங்கி பாராட்டினார்கள் முடிவில் அனை வருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது
முடிவில் உதவி ஆசிரியைஎஸ்.கலையரசி நன்றி கூறினார் .
மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக