மசினகுடி குட் ஷெப்பர்ட் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோய்சி, நுகர்வோர் பாதுகாப்பு மையம் நிர்வாகி மகேந்திர பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளியின் தாளாளர் பாபு நரேந்திரன் தலைமை தாங்கி பேசும்போது பெற்றோர்கள் மாணவர்களுடன் அதிக நேரம் செலவிட்டு பிள்ளைகளின் படிப்பில் அக்கறை காட்ட வேண்டும். மாணவர்கள் வாசிப்புத் திறனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பள்ளியில நூலகம் மற்றும் விளையாட்டு மைதானம் மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது பெற்றோர்கள் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் மாணவர்கள் வளர்ச்சிக்கு உதவ முடியும். பெற்றோர்கள் பிள்ளைகளை அவர்களது சிறு சிறு பணிகளை அவர்களே செய்து கொள்ள பழக்ககுவது, தான் சுத்த பராமரிப்பு பழக்கம் ஏற்ப்படுத்துவது, பெரியவர்களை மதித்தால் உள்ளிட்ட நற்பண்புகளை வளர்த்து கொள்ள செய்ய வேண்டும். பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுடன் கலந்து பேசுதல், விளையாடுதல், தங்களின் உழைப்பு சம்பந்தமாகவும் வருவாய் சம்பந்தமாகவும் பிள்ளைகளுக்கு எடுத்து சொல்லுதல் அவசியம். அதுபோல பிள்ளைகள் படிக்கும் நேரத்தில் சமூக ஊடக பயன்பாடுகள், டிவி இயங்குவதை தவிர்க்க வேண்டும். பணம், நகை இருக்கும் இடங்களை பிள்ளைகளுக்கு தெரியாமல் பார்த்து கொள்ளுதல் அவசியம். அதுபோல் பெற்றோர்கள் பிள்ளைகள் முன் சண்டையிடுதல், கொஞ்சுதல் போன்றவை தவிர்க்க வேண்டும். பிள்ளைகளின் செயல்பாடுகள் தொடர் கண்காணிப்பு இருந்தால் மட்டுமே அவர்களுக்கு ஏற்படும் நல்லது, கொட்டது அறிந்து கொள்ள முடியும் என்றார்.
கூட்டத்தில் பெற்றோர்கள் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக