ஆகஸ்ட் 15. நாசரேத். நாசரேத் சாலமோன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 79வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் பள்ளி தாளாளர் ஜமீன் சாலமோன் தலைமை தாங்கினார். பள்ளி தலைவர் எலிசபெத் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக செந்தில்குமார் தேசிய கொடியை ஏற்றி, நம் முன்னோர் சுதந்திரத்திற்காக செய்த தியாகத்தையும், அதை நாம் எப்படி பேணிகாக்க வேண்டும் என மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
பள்ளி மாணவிகள் மெலோசா மற்றும் ஜெனிபர் நிகழ்சிசியை தொகுத்து வழங்கினர். மாணவர்கள் நடனம், பரதநாட்டியம், தேசப்பற்று நாடகம் மற்றும் மாறுவேட போட்டியிட்டு வந்தனர். இறுதியில் பள்ளி மாணவி வைஷ்ணவி; நன்றி கூறினார்.
இந்த விழா ஏற்பாட்டினை துணைமுதல்வர் மாரித்தங்கம் மற்றும் பிற ஆசிரியர்கள் சிறப்பாக செய்து இருந்தனர். தேசிய கீதம் முழங்க சுதந்திர தினவிழா இனிதே நிறைவடைந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக