மத்திய அரசு விருதுகளை குவிக்கும் நெல்லை காவல்துறை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2025

மத்திய அரசு விருதுகளை குவிக்கும் நெல்லை காவல்துறை

விருதுகளை குவிக்கும் நெல்லை காவல்துறை

சுதந்திர தின விழா திருநெல்வேலி தனிப்பிரிவு ஆய்வாளர் அதிசயராஜுக்கு குடியரசுத் தலைவர் விருது மத்திய அரசு அறிவிப்பு.

திருநெல்வேலி, நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய அதிகாரிகளுக்கு இந்தியக் குடியரசுத் தலைவரின் தகைசால் மற்றும் மெச்சத்தக்க பணிக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த தனிப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளர் ஜே. அதிசயராஜ், மெச்சத்தக்க பணிக்கான குடியரசுத் தலைவர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சிறப்பான சேவைக்கு அங்கீகாரம்
காவல் துறையில் நீண்ட காலம் சிறப்பாகவும், குற்றச் செயல்களைத் திறம்படக் கையாண்டும், மெச்சத்தக்க வகையிலும் பணியாற்றும் அதிகாரிகளை அங்கீகரிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தில் இந்த விருது மத்திய அரசால் வழங்கப்படுகிறது:

மெச்சத் தகுந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அதிசயராஜுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்கள தெரிவித்து வருகின்றனர்

நெல்லை மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad