விசைப்படகில் சிக்கிய புலி இறால் ரூ.8000க்கு ஏலம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 21 ஆகஸ்ட், 2025

விசைப்படகில் சிக்கிய புலி இறால் ரூ.8000க்கு ஏலம்.

விசைப்படகில் சிக்கிய புலி இறால் ரூ.8000க்கு ஏலம்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கொட்டில்பாட்டை சேர்ந்த அகிலன் என்பவர் ஆழ்கடலில் மீன்பிடித்து குளச்சல் துறைமுகத்திற்கு திரும்பியிருந்தார். 

அவரது வலையில் கணவாய், நாக்கண்டம் மீன்களுடன் அரியவகை புலி இறால் ஒன்று சிக்கியது. 

2.800 கிலோ எடை கொண்ட இந்த புலி இறாலுக்கு வெளிநாட்டில் அதிக மவுசு உள்ளதால் மீனை தனியாக உயிருடன் கடல் நீர் கலந்த பெட்டியில் போட்டு ஏலம் விட்டனர். இந்த மீனை வாங்க பலர் போட்டி போட்ட நிலையில் ரூ.8000 -க்கு ஏலம் போனது.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். 
என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad