கிருஷ்ணகிரி விஜய் இன்ஸ்டிட்யூட்டில் 79வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2025

கிருஷ்ணகிரி விஜய் இன்ஸ்டிட்யூட்டில் 79வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.


கிருஷ்ணகிரி, ஆக 15 -


கிருஷ்ணகிரியில் உள்ள விஜய் இன்ஸ்டிட்யூட்டில் 79வது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு இன்ஸ்டிட்யூட் தாளாளர் திரு. துரைசாமி தலைமையாற்றி, சுதந்திர தின உரையாற்றினார். பின்னர் நர்சிங் மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார். விழா ஏற்பாடுகளை ஆசிரியர் உமேரா பேகம் மேற்கொண்டு, தேசியக்கொடியை ஏற்றினார். மேலும், ஆசிரியர் நித்யா அவர்கள் மகாத்மா காந்தி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இவ்விழாவில் குரு பிரசாந்த் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.


விழா முடிவில், மகாத்மா காந்தியின் வரலாற்றை விரிவாக எடுத்துரைத்து, அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் கூறினார். ஆடிட்டர் தமிழ்செல்வன் நன்றி உரையாற்றினார். மேலும், மாணவி காவியா நர்சிங், சுதந்திர தினத்தின் முக்கியத்துவத்தை பற்றி உரையாற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad