79 ஆவது சுதந்திர தினம் விழா கொடி ஏற்ற விடாமல் பட்டியில் இனத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் அவமதிப்பு!
குடியாத்தம் , ஆகஸ்ட் 15 -
இந்திய தேசியக்கொடியை ஏற்ற வந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரை தடுத்து நிறுத்தியவர் கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் டெல்லியில் செங்கோட்டையில் இயற்றிய முதல் தேசியக் கொடியின் பெருமைக்கு பேர் போன ஊரான குடியாத்தம் பகுதி யில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஊரா ட்சி மன்ற தலைவரை இந்திய தேசியக் கொடியை ஏற்ற விடாமல் புறக்கணித்த வர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக் கை விடுத்துள்ளார். இன்று ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்லப் பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய கொடியை ஏற்ற பட்டினத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் அவர் களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் அழைப்பு விடுத்திருந்தார். அதைத்தொட ர்ந்து கொடியேற்ற பள்ளிக்கு வந்த ஊரா ட்சி மன்றத் தலைவர் ரமேஷ் கொடி ஏற்ற விடாமல் அங்கிருந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த சபாபதி மற்றும் வேலாயுதம் ஆகி யோர் தடுத்து நிறுத்தி தேசிய கொடியை ஏற்றியதாக கூறப்படுகிறது. இதில் மனமு டைந்து இதுகுறித்து தலைமை ஆசிரிய ரிடம் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் கேட்டபோது இதுகுறித்து சரிவர பதில் அளிக்கவில்லை. இதனை தொடர்ந்து தான் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் என்னை பள்ளியில் தேசியக் கொடி ஏற்ற அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தி தகதகால் பேசி கேவலப்படுத்தி யவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடுமை யாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
குடியாத்தம் தாலுக்கா
செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக