கடலூர் மாவட்டம், நெய்வேலி வட்டம்–19 இல் அமைந்துள்ள மனவள கலை மன்ற அறக்கட்டளை அறிவு திருக்கோயிலில், மனைவி நல வேட்பு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு மனவள கலை மன்ற அறக்கட்டளையின் தலைவர் நந்தகுமார் தலைமையேற்றார்.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக உலக சமுதாய சேவா சங்க இயக்குனர் மற்றும் துணைத் தலைவர் உழவன் மா. தங்கவேலு, விழுப்புரம் மண்டல தலைவர் ரவிச்சந்தர் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தனர்.
பேச்சாளர்கள் உரையாற்றியபோது, “1994 ஆம் ஆண்டு வேதாந்திரி மகரிஷி அவர்கள் குடும்பத் தலைவிகளை கௌரவிக்கும் வகையில் மனைவி நல வேட்பு விழா தொடங்கப்பட்டது. கடந்த 34 ஆண்டுகளாக வருடந்தோறும் ஆகஸ்ட் 30ஆம் தேதி இந்த விழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என தெரிவித்தனர்.
தினமும் குடும்பத்திற்காக உழைக்கும் மனைவியை கௌரவிக்கும் விதமாகவும், அன்பின் வெளிப்பாடாகவும் இவ்விழா கொண்டாடப்படுவது சிறப்பு. இந்நிகழ்ச்சியில் தம்பதியர்கள் அனைவரும் கலந்து கொண்டு மாலை மாற்றி அணிவித்து, ஒருவருக்கொருவர் அன்பை வெளிப்படுத்தினர். இதன் மூலம் மன அமைதி மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்பட்டது.
நிகழ்ச்சியில் அறிவு திருக்கோவில் செயலாளர் செல்வநாயகி, பொருளாளர் ஜனநாயகம் செல்வராஜ், துணைத் தலைவர்கள் ஏழுமலை, எம்.ஆர். ஏழுமலை, வேல்விழி, பன்னீர், வில் விஜயன், பொறுப்பாசிரியர் சுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக