வேலூர் டார்லிங் ரெசிடன்ஸியில் மாவட் டத்திலுள்ள அனைத்து தங்கும் விடுதி உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2025

வேலூர் டார்லிங் ரெசிடன்ஸியில் மாவட் டத்திலுள்ள அனைத்து தங்கும் விடுதி உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம்!

வேலூர் டார்லிங் ரெசிடன்ஸியில் மாவட் டத்திலுள்ள அனைத்து தங்கும் விடுதி உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம்!
வேலூர் , ஆகஸ்ட் 3 -

வேலூர் மாவட்டம் ஆந்திரா மற்றும் கர்நா டகா ஆகிய இரண்டு முக்கிய மாநிலங்க ளை இணைக்கும் மையமாக திகழ்கின் றது. வேலூருக்கு தினந்தோறும் ஆயிரக் கணக்கான மக்கள் மருத்துவம், ஆன்மீகம் மற்றும் சுற்றுலா காரணங்களுக்காக வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் வெளி மாவட்ட, வெளிமாநில மற்றும் வெளிநாட்டவர்கள் தங்கிச்செல்ல, வேலூ ரில் நூற்றுக்கும் அதிகமான தங்கும் விடு திகள் உள்ளது. அனைத்து தங்கும் விடுதி களிலும், வந்து தங்கும் பயணிகளின் விபரங்கள் சேகரிக்கப்படுவது வழக்கம் உள் நாட்டவர்களிடம் அரசு அங்கீகரித்த ஆவணங்களை காண்பித்தும், வெளி நாட்டவர்களுக்கு சி பார்ம் எனப்படும் முறையை பின்பற்றி விபரங்கள் சேகரிக் கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அவர்கள் இன்று 02.08.2025-ம் தேதி காலை 10.30 மணியளவில் வேலூர் டார்லிங்ரெசிடன்ஸியில் மாவட்டத்திலு ள்ள அனைத்து தங்கும் விடுதி உரிமை யாளர்களுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். அதில் அனைத்து ஆவணங்களையும் டிஜிட்டல் மயமாக்கும் வகையில் விருந்தினர்" என்ற புதிய தொரு இணையதள பக்கத்தை அறிமுகப் படுத்தினார். இதன் மூலம் விடுதிகளில் தங்குவோரின் விபரங்கள் உடனடியாக பதிவேற்றப்படுவதன் மூலம் காவல்துறை யினரின் கவனத்திற்கு கொண்டு செல் லப்படும். மேலும் சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாப்பிலும், குற்ற நிகழ்வுகளை தடுக் கவும் இது பயனுள்ளதாக அமையும் என்றும், போலீசாருக்கும் விடுதி உரிமை யாளர்களுக்கும்இடையில்இந்தஇணைய பக்கம் ஒரு பாலமாக இருக்கும் என்றும், அனைத்து விடுதி உரிமையாளர்களும் சாலை ஓரங்களில், பாதையை அடைக் கும் வகையில் வைக்கப்படும் விளம்பர பலகைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும், சாலைகளில் நெரிசல் களை குறைக்க வாகனங்கள் நிறுத்து மிடங்களை அமைக்குமாறும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆலோசனை வழங்கினார் என்பதை வேலூர் மாவட்ட காவல்துறையின் சார்பாகதெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad