சேத்தியாத்தோப்பு அருகே வத்தராயன்தெத்து கிராமத்தில் நடைபெற்ற பிரசித்தி பெற்ற பச்சைவாழி அம்மன் கோவில் தீமிதி திருவிழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2025

சேத்தியாத்தோப்பு அருகே வத்தராயன்தெத்து கிராமத்தில் நடைபெற்ற பிரசித்தி பெற்ற பச்சைவாழி அம்மன் கோவில் தீமிதி திருவிழா.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்புஅருகே வத்தராயன்தெத்து  கிராமத்தில் பிரசி்த்திப்பெற்ற பச்சைவாழியம்மன் கோவில் இருந்து வருகிறது.இந்தக்கோவிலின் பாரம்பரியமான தீமிதி திருவிழா கடந்த ஆடிமாதம் முதல்வெள்ளியன்று கோவிலின் காப்புக்கட்டுதலுடன் ஆரம்பமானது. இதனையடுத்து கோவிலில் பல்வேறு அபிஷேகங்களும், பூஜைகளும் நடைபெற்று வந்தன. இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்வான தீமிதி திருவிழா நடைப்பெற்றது. முன்னதாக வேண்டுதலை நிறைவேற்றும்பொறுட்டு கோவிலின் வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். முக்கிய மாக  தீக்குண்டத்தின் முன்பு பால்குழி இருப்பது போல் அல்லாமல், பால் குழியே இல்லாமல் பாரம்பரியமாக பல ஆண்டுகளாக நடைப்பெ பெறுகிற தீமிதி விழா என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதி திருவிழாவைக் கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad