சேத்தியாத்தோப்பு அருகே கானூர் கிராமத்தில் அதிமுக சார்பில் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2025

சேத்தியாத்தோப்பு அருகே கானூர் கிராமத்தில் அதிமுக சார்பில் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே அதிமுக சார்பில் சாதனை விளக்கத்துண்டு பிரசுரம் வழங்குதல் மற்றும் திண்ணைப் பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. கடலூர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவைச் செயலாளரும், முன்னாள் சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தலைவருமான கானூர் பாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், சிதம்பரம் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ. பாண்டியன், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என். முருகுமாறன், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் கே.எஸ்.கே. பாலமுருகன் ஆகியோர் பங்கேற்று கானூர் கிராமத்தில் உள்ள கடைகள், பொதுமக்கள் என பலரிடமும் அதிமுக அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை வழங்கி, நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படாத திட்டங்களைப் பற்றி எடுத்துக் கூறியும் திண்ணைப் பிரச்சாரம் நடைபெற்றது. ஸ்ரீமுஷ்ணம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஜோதி பிரகாஷ் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மேற்கு ஒன்றியச் செயலாளர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட அதிமுக கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad