மத்திய அரசின் கேலோ இந்தியா அஸ்மிதா மகளிர் கிக் பாக்ஸிங் லீக் போட்டி தமிழ்நாடு அமைச்சூர் கிக் பாக்சிங் சங்கம் சார்பில் மாநில அளவிலானகிக் பாக்ஸிங் போட்டி சென்னை கீழ்ப்பாக்கம் நேருபார்க்கில்நடைபெற்றது.
இப்போட்டியில் 18 மாவட்டங்களைச் சேர்ந்த முன்னூறுக்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டிகிக் லைட் லைட் காண்டக்ட் பாயிண்ட் பைட்,லோகிக் எனபல்வேறுபிரிவுகளில் நடைபெற்றது.
இப்போட்டியில் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பூதங்குடியில் உள்ள . எஸ். டி. சியோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். இப்போட்டியில் எஸ்.கார்த்திகா முதல்பரிசும், எஸ்.அட்சயா இரண்டாம் பரிசும்பெற்று நமது பள்ளிக்கும் நமது மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளியின் தாளாளர். திரு.சாமுவேல் சுசின், குழந்தைகள் நல மருத்துவர்மற்றும் பள்ளியின் நிர்வாக இயக்குனர்திருமதிதீபா சுஜின், பள்ளியின் தலைமை ஆசிரியர்ஆண்டனி ராஜ், வீரூகிக் பாக்ஸிங் சங்கத் தலைவர் சென்சாய் வி.ரங்கநாதன் ஆகியோர் மாணவிகளை பாராட்டி ஊக்கப்படுத்தினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக