சேத்தியாத்தோப்பு அருகே அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2025

சேத்தியாத்தோப்பு அருகே அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி கிராமத்தில் அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட அம்மா பேரவை துணைச்செயலாளர் அரங்கப்பன் ஏற்பாட்டின் பேரில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில், கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழிதேவன் பங்கேற்று கழகத்தின் மூத்த முன்னோடி நிர்வாகிகளுக்கு கழகத்தின் வேட்டியும், பொற்கிழியும் வழங்கி கெளரவித்தார். இதனையடுத்து நூற்றுக்கணக்கான ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 


மேலும் நூற்றுக்கணகானவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. முன்னதாக ஸ்ரீபொம்மியம்மாள்,
ஸ்ரீவெள்ளையம்மாள் சமேத வீரனார் ஆலயத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2026ல் தமிழகத்தின் முதல்வராக வரவேண்டிபுவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் தலைமையில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றது. மேலும் இந்த நலத்திட்டம் வழங்கும் விழாவில் கீரப்பாளையம் மேற்குஒன்றிய செயலாளர் கருப்பன் மற்றும் அதிமுக கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று சிறப்பித்தனர். 
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad