ராமநாதபுரம் தமிழ்நாடு காவல்துறை உட்கோட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அரிசி கடை வியாபாரிகள் சங்க திருமணமஹாலில் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2025

ராமநாதபுரம் தமிழ்நாடு காவல்துறை உட்கோட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அரிசி கடை வியாபாரிகள் சங்க திருமணமஹாலில் நடைபெற்றது.

ராமநாதபுரம் தமிழ்நாடு காவல்துறை உட்கோட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அரிசி கடை வியாபாரிகள் சங்க திருமணமஹாலில் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஸ் உத்தரவு படி ராமநாதபுரம் உட்கோட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 05.08.2025 அன்று ராமநாதபுரம் கேணிக்கரை அரிசி கடை வியாபாரிகள் சங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெறப்பட்ட புகார் மனு மீதான விசாரணை நடைபெற்றது.

உட்கோட்ட காவல் நிலையம் கேணிக்கரை காவல்நிலையம், பி-1 காவல் நிலையம், பஜார் காவல் நிலையம் மற்றும் மகளிர் காவல் நிலைய அலுவலர்கள் காவலர்கள் கலந்து கொண்டு பொதுமக்களை நேரில் அழைத்து மனுக்கள் மீதான விசாரணை செய்தனர்.

பெறப்பட்ட ஆதாரம் மற்றும் விசாரணை அடிப்படையில் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தனர்.இந்த உட் கோட்ட மக்கள் குறைதீக்கும் கூட்டத்திற்கு ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad