தமிழ்நாடு விளையாட்டுத்துறையின் சார்பில் சென்னை, கோவை, குமரிக்கு மொத்தம் ரூ.10.89 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தலைநகர் சென்னைக்கு நிகராக நம்ம குமரிக்கும் ரூ.3 கோடி வழங்கப்பட்டுள்ளது.
அந்த நிதியில் குளச்சலில் முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கம் கட்டப்படவுள்ளது. 200 மீட்டர் ஓட்டப்பாதை, கைப்பந்து, கபடி, கூடைப்பந்து, இறகுப்பந்து, கோ-கோ போன்ற ஆட்டங்களுக்கான மைதானங்கள் அமைக்கப்படுகின்றன.
அதோடு, அலுவலக வசதி மற்றும் நவீன கழிப்பறை கட்டிடங்களும் இணைக்கப்பட்டுள்ளன. இது மாவட்டத்தின் விளையாட்டு திறமைகளை வெளிக்கொணரும் ஒரு முக்கிய வாய்ப்பாக அமையும்.
இனி குமரியின் பசங்கள் விளையாட்டுத் துறையில் மேலும் உயர்வுகளை எட்டுவார்கள் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக