அரசுக்கு எதிரான விநாயகர் சிலைகள் தயாரிப்பு: சிவசேனா கட்சியின் சார்பில் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு
கும்பகோணத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ள விதிமுறைகளை மீறி விநாயகர் சிலைகள் தயாரிப்பு அதை தடுக்க கோரி
தஞ்சை மாவட்ட ஆட்சியர் மற்றும் கும்பகோணம் கோட்டாட்சியரிடம் சிவசேனா கட்சியின் சார்பாக மனு .கொடுக்கப்பட்டது.பின்னர் சிவசேனா கட்சியின் மாநில துணைத்தலைவர் பூக்கடை எஸ் ஆனந்த் கூறுகையில் கும்பகோணம் காரைக்கால் புறவழிச்சாலையில் ஆயிரக்கணக்கான பி ஓ பி பிளாஷ் ஆப் பாரீஸ் விநாயகர் சிலைகள் அரசு விதிமுறைக்கு மீறி தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு உள்ளது இதனை மாவட்ட ஆட்சியர் உடனடியாக தடுத்து நிறுத்தி சிலைகளை அரசே கைப்பற்ற வேண்டும் என்ற கோரிக்கை மனுவை நேற்று.20/8/2025. நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் நாங்கள் நேரில் மனு கொடுத்தோம். அதனைத் தொடர்ந்து இன்று(ஆகஸ்ட்21)
கும்பகோணம் கோட்டாட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.போர்க்கால அடிப்படையில் இதனை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தமிழகத்திற்கு நீண்ட கால பாரம்பரியம் உள்ளது அதைக் காக்கும் நோக்கத்தில் இந்த மனு அளிக்கப்பட்டுள்ளது விநாயகர் சதுர்த்தி இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில் இந்த விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்பட்டால் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ள விதிமுறைகளை பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ள விதிமுறைகளையும் கடைபிடிக்காத நிலை ஏற்பட்டுவிடும் மாவட்ட நிர்வாகத்திற்கு அந்த அவப்பெயர் வந்து விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் இதனை மாவட்ட நிர்வாகத்திடம் சிவசேனா கட்சி நிர்வாகிகள்
தெரியப்படுத்தியுள்ளோம். உடனடியாக அந்த சிலைகளை பறிமுதல் செய்து உரிய ஆய்வுக்கு உட்படுத்திய பிறகு வெளியில் விநியோகம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சிவசேனா கட்சியின் சார்பாக மாவட்ட நிர்வாகத்திடம் கூறியுள்ளோம் இதனை உடனடியாக நிறைவேற்றுவார்கள் என்ற நம்புகிறோம் என்றார். உடனிருந்தோர் சிவசேனா கட்சியின் மாநிலச் செயலாளர் .அழகு பாண்டிB.Com LL.B ,ஆன்மிக மேம்பட்டு அணி மாவட்ட தலைவர் பரணிதரன்,M.Comமண்டல தலைவர் உதயகுமார்,உள்ளிட்டோர் பல நிர்வாகிகள் இருந்தனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக