ஸ்டாலின் அங்கிள்...எப்படி அங்கிள்? - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2025

ஸ்டாலின் அங்கிள்...எப்படி அங்கிள்?


 ஸ்டாலின் அங்கிள்...எப்படி அங்கிள்?


ஒரு தவறு செய்தால், அதனை தெரிந்து செய்தால் அது ஸ்டாலின் அங்கிளாக இருந்தாலும் விட மாட்டேன். ஸ்டாலின் அங்கிள் அவர்கள் உங்களிடம் சில கேள்விகளை முன் வைக்கிறேன். அதற்கு பதில் சொல்லுங்க ப்ளீஸ். உங்களது ஆட்சியில் நேர்மை இருக்கா? நியாயம் இருக்கா? சட்டம் ஒழுங்கு இருக்கா? பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கா? இது போன்ற கேள்விகளுக்கு உங்களால் பதில் கூற முடியுமா? பெண்களுக்கு ரூ.1000 கொடுத்து விட்டால் சரியாகி விடுமா? ஆனால், அவர்கள் வெளியே போனால் பாதுகாப்பு இல்லையே? பெண்களை மட்டுமே ஏமாற்றுகிறீர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினரையும் ஏமாற்றி வருகிறீர்களே? மை டியர் அங்கிள்...வெரி வெரி ஸாரி அங்கிள்.
தமிழ்நாடு முழுவதும் விஜய் தான் வேட்பாளர் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் உள்ள குழந்தைகளின் தாய்மாமன் நான் தான். தமிழ்நாடு முழுவதும் நானே வேட்பாளர் என நினைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும். 234 தொகுதிகளிலும் உங்கள் சின்னம் விஜய் தான். தவெகவினர் மத்தியில் எந்த அரசியலும் நுழைய முடியாது. உங்களுக்காக உழைக்க வந்துள்ளேன். மக்களை மதிக்கிறேன். மக்களை வழிபடுகிறேன். மக்களுக்கு பணி செய்வதே எனது கடமை.
அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை சினிமாவில் வாய்ப்பு இழந்த பிறகு அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை. படைக்கலத்துடன் அரசியலுக்கு வந்துள்ளேன். தமிழ்நாடு மக்கள் என்னை வீட்டில் ஒருவராக நினைக்கின்றனர். எனவே, இந்த மக்கள் கடவுள் எனக்குக் கொடுத்த வரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad