சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் காலை 09.00 மணி முதல் மதியம் 03.00 மணி வரை நடைபெறவுள்ளது
சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழக பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 23ம் தேதி நடக்கிறது என கடலூர் மாவட்ட
ஆட்சியர் தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் 23.08.2025 அன்று சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார். 2025-26ஆம் ஆண்டில் கடலூர் மாவட்டத்தில் மகளிர் திட்டம் மூலம் வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 23.08.2025 சனிக்கிழமை அன்று சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் காலை 09.00 மணி முதல் மதியம் 03.00 மணி வரை நடைபெறவுள்ளது
இம்முகாமில் மகளிர் திட்டம் தொழில் திறன் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு, மாவட்டத்தில் உள்ள தொழிற்கல்வி மற்றும் பொதுக்கல்வி படித்த அனைத்து இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தரும் வகையில் நடத்தப்படவுள்ளது. இம்முகாமில் கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், அண்ணாகிராமம், பண்ருட்டி, கீரப்பாளையம், கம்மாபுரம், குறிஞ்சிப்பாடி, குமராட்சி, மேல்புவனகிரி, பரங்கிப்பேட்டை, ஸ்ரீமுஷ்னம், காட்டுமன்னார்கோயில், மங்களூர், நல்லூர் மற்றும் விருத்தாசலம் வட்டாரங்களில் உள்ள ஊரகம் மற்றும் நகர்புற இளைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
கடலூர் மாவட்ட மகளிர் திட்டம் மூலம் இளைஞர் தொழிற்திறன் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் இதர கல்வி தகுதிகளையுடைய இளைஞர்கள் தங்களது அசல் கல்வி சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்று சான்றிதழ், சாதி சான்று, இருப்பிட சான்று, வருமானச்சான்று, குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை இத்துடன் இரண்டு (பாஸ்போர்ட் சைஸ்) புகைப்படங்கள், சுய விலாசமிட்ட அஞ்சல் உறைகளுடன் மேற்படி முகாமில் கலந்துக்கொண்டு
பயன் பெறுமாறு கேட்டுக்கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திபிரிவு கடலூர் மாவட்ட செய்தியாளர் P ஜெகதீசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக