கணவன் கண் முன்னே ரயிலில் சிக்கி தலை துண்டாகி மனைவி பலி!
அணைக்கட்டு , ஆகஸ்ட் 21 -
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பொய் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் விடுமுறை முடிந்து பணிக்கு திரும்ப காட்பாடி ரயில் நிலையத்தில் வழியனுப்ப வந்தபோது, ராணுவ வீரரின் அடையாள அட்டை கொடுக்க ஓடிச் சென்ற மனைவி தண்டவாளத் தில் விழுந்து, ராணுவ வீரர் கண்ணெ திரே ரயிலில் சிக்கி தலை துண் டாகி பலி யானார். வேலூர் மாவட்டம் பொய்கை கிராமம் மாரியம்மன் கோயில் தெரு வைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 36) ராணுவ வீரர். இவரது மனைவி சிந்து(வயது 32) இந்த தம்பதிக்கு திரு மணமாகி 9 ஆண்டுகள் ஆன நிலை யில் 2 ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்
பிரபாகரன் விடுமுறையில் செகந்தி ராபாத்தில் இருந்து தனது சொந்த ஊருக்கு சில நாட்களுக்கு முன் வந் தார். விடுமுறை முடிந்து வேலைக்கு செல்ல நேற்று முன்தினம் காட்பாடி ரயில் நிலையத்திற்கு புறப்பட்டார். அப்போது, அவரது மனைவி சிந்துவும் அவருடன் காட்பாடி ரயில் நிலையத் திற்கு வந்தார். சபரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பிரபாகரன் டிக்கெட் முன் பதிவு செய்திருந்தார். இரவு 10 மணி க்கு சபரி எக்ஸ்பிரஸ் ரயில் காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது பின்னர், பிரபாகரன் ரயிலில் ஏரி ரயில் புறப்பட இருந்த நிலையில் ராணுவ வீரரின் அடையாள அட்டை தன்னிடம் இருப்பதை சிந்து தாமத மாக அறிந்துள்ளார். அப்போது ரயில் புறப்பட்ட நிலையில், சிந்து கணவரை அழைத்தபடி ஓடிச்சென்று அவரிடம் அடையாள அட்டையை கொடுக்க முய ன்றார். அப்போது சிந்துவின் கை ரயி லில் பட்டதால் தவறிதண்டவாளத்தில் விழுந்தார் கணவரின் கண் முன்னே தலை மற்றும் கால்கள் துண்டாக மனைவி பலி அப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக