அனைத்து சமுதாயக் கூட்டமைப்பின் மாநில துணைச் செயலாளராக கும்பகோணத்தை சேர்ந்த பூக்கடை எஸ் ஆனந்த் நியமனம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2025

அனைத்து சமுதாயக் கூட்டமைப்பின் மாநில துணைச் செயலாளராக கும்பகோணத்தை சேர்ந்த பூக்கடை எஸ் ஆனந்த் நியமனம்

 


அனைத்து சமுதாயக் கூட்டமைப்பின் மாநில துணைச் செயலாளராக கும்பகோணத்தை சேர்ந்த பூக்கடை எஸ் ஆனந்த் நியமனம் :மாநிலத் தலைவர் அறிவிப்பு


 தமிழ்நாடு அனைத்து சமுதாய கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் மோ. சத்தீஷ்குமார்., பாபு பரமேஸ்வரன்  ஆகியோர் கூறுகையில். அனைத்து சமுதாயக் கூட்டமைப்பின் மாநில துணைச் செயலாளராக கும்பகோணத்தை சேர்ந்த பூக்கடை எஸ் ஆனந்த் நியமனம் செய்யப்பட்டுஉள்ளார் ஆகையால் அனைத்து சமுதாய பொறுப்பாளர்களும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறோம் எங்களின் இந்த அமைப்பானது சமுதாய பிரச்சனைகளுக்கும் பொதுமக்களின் பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்கும்.மேலும் எங்கள் சமுதாயம் சார்ந்த பிரச்சனைகளை அந்தந்த சமுகங்களே பேசி தீர்த்துக் கொள்ளும் நோக்கத்தில் இந்த அமைப்பு செயல்படும் அரசியல் சாராத இந்த இயக்கத்தில் அனைத்து சமுதாயத்தினரும் பொறுப்பு வகிக்கின்றனர் இனி வரும் காலங்களில் சமுதாய ஓட்டுக்களை சமுதாயத்திற்கு பயன்படும் நோக்கத்தில் செயல்படுத்தவே இந்த இயக்கம் இயங்கும் என்பதை தெரிவித்துக் கொண்டு அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றிணைந்து செயல்பட இந்த இயக்கம் வழி வகுக்கும் என்று தெரிவித்தார்கள். மேலும் மாநில தலைவர் கூறுகையில் வருகின்ற 2026 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் எங்கள் தமிழ்நாடு அனைத்து சமுதாயக் கூட்டமைப்பின் சார்பில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாகவும் அறிவித்துள்ளார்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad