நவ்லாக் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2025

நவ்லாக் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்!

நவ்லாக் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்!
ராணிப்பேட்டை , ஆகஸ்ட் 8 -

ராணிப்பேட்டை மாவட்டம்  வாலாஜா ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நவ்லாக்  ஊராட்சியில் தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின்திட்ட முகாம் நடைபெற்றது.இந்த முகாமில் வாலாஜா ஊராட்சி ஒன்றிய குழு பெருந் தலைவர் சேஷா வெங்கட் நேரில் சென்று பார்வையிட்டு பொதுமக்களிடம் முகாம் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர் இம்முகாமில் நவ்லாக் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து ஏராள மான மனுக்கள் பெறப்பட்டது.இதனைத் தொடர்ந்து இந்த முகாமில் தீர்வு காணப் பட்ட பயனாளிகளுக்கு வயதான முதி யோர்களுக்கு மருந்து பெட்டகம் கர்ப் பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், மரக்கன்றுகள்  மற்றும் பல் வேறு துறை சார்ந்து நலத்திட்ட உதவி களை வாலாஜா ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சேஷா வெங்கட்  வழங்கினார்.
இந்த முகாமில் நவ்லாக் ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி குமார், துணைத் தலைவர் சரஸ்வதி ரவிச்சந்திரன் முன் னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவஞா னம், ஊராட்சி செயலாளர் வாசுதேவன் மற்றும் துணை வட்டாட்சியர்கள், ஊரா ட்சி மன்ற உறுப்பினர்கள்,கிராம நிர்வாக அலுவலர்கள்   மற்றும்  பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர் .

மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad