சிவகங்கையில் "வாக்கு திருடனே பதவி விலகு" என்ற முழக்கத்தோடு கண்டன ஊர்வலம் சென்ற காங்கிரஸ் கட்சியினர்.
அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர்களில் ஒருவரும், இந்திய பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான திரு ராகுல்காந்தி அவர்கள் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இந்திய இறையாண்மைக்கும் ஜனநாயகத்திற்கும் விரோதமாக இந்திய தேர்தல் ஆணையம் இந்திய மக்கள் அளித்த தீர்ப்பிற்கு எதிராக, பாஜகவின் சூழ்ச்சியால் வாக்காளர் பட்டியலில் மேற்கொண்ட வரலாறு காணாத மோசடிகள் மற்றும் முறைகேடுகளை இந்திய தேசிய அளவில் தோலுரித்து அம்பலப்படுத்தி வரும் நிலையில், ராகுல் காந்தி அவர்களுக்கு ஆதரவாக, சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக வியாழக்கிழமை மாலை "வாக்கு திருடனே பதவி விலகு" என்ற கண்டன முழக்கத்துடன், கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் உள்ள ராமச்சந்திரா பூங்காவில் துவங்கி முதல் அரண்மனை வாசல் காமராஜர் சிலை வரை கண்டன ஊர்வலம் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் திரு சஞ்சய் காந்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளர் திரு சி. ஆர். சுந்தர்ராஜன், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ் மாங்குடி மற்றும் சிவகங்கை சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் ஏ. என். சோனை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் மாநில, மாவட்ட வட்டார, மாநகர, நகர, நகராட்சி, பேரூர் மற்றும் ஊராட்சிகளை சேர்ந்த காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், காங்கிரஸ் கமிட்டியின் அனைத்து பிரிவுகளை சேர்ந்த முன்னாள் மற்றும் இந்நாள் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக