சிவகங்கை ஆட்சியர் வளாகத்தில் 79 ஆவது சுதந்திர தின விழாவில் வெண் புறாவை சிறகடித்து பறக்க விட்டு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2025

சிவகங்கை ஆட்சியர் வளாகத்தில் 79 ஆவது சுதந்திர தின விழாவில் வெண் புறாவை சிறகடித்து பறக்க விட்டு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து

 


சிவகங்கை ஆட்சியர் வளாகத்தில் 79 ஆவது சுதந்திர தின விழாவில் வெண் புறாவை சிறகடித்து பறக்க விட்டு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து. 



நாடு முழுவதும் 79-வது சுதந்திர தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மூவர்ண கொடியை ஏற்றி மரியாதை செலுத்தி, முப்படைகளின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டு, இந்திய திருநாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் தனது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து, நாட்டு மக்களுக்கு தனது சுதந்திர தின உரையாற்றினார். 



அதேவேளையில் தமிழக முதலமைச்சர் திரு மு. க. ஸ்டாலின் அவர்கள் தலைநகர் சென்னையில் உள்ள ஜார்ஜ் கோட்டையில் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வணக்கம் செலுத்தி தமிழக மக்களுக்கு தனது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து, "ஜனநாயகத்தை திருட முடியாத தேசத்தை கட்டியெழுப்ப உறுதிமொழி ஏற்போம்" என்றும் தனது உரையில் தெரிவித்துள்ளார். 



இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இந்திய திருநாட்டின் 79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திருமதி கா. பொற்கொடி இ.ஆ.ப அவர்கள் இந்திய தேசிய மூவர்ண கொடியை கொடி கம்பத்தில் ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் வெண் புறாவை சுதந்திரமாக சிறகடித்து பறக்க விட்டு சுதந்திர தின விழா வாழ்த்துக்களை தெரிவித்தார்.



அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின அணிவகுப்பில் கலந்து கொண்டார். மேலும் ஆட்சியர் வளாகத்தில் மூவரணங்களை கொண்ட பலூன்களை வானில் பறக்க செய்து அனைவருக்கும் சுதந்திர தின விழா வாழ்த்துக்கள் மற்றும் இனிப்புகள் பரிமாறப்பட்டது. 



இந்நிகழ்வில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஆர். சிவபிரசாத் இ.கா.ப, காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள், அரசு அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலர்கள், தேசிய மாணவர் படையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad