பெருங்குளம் மாயக்கூத்த பெருமாள் கோவிலில் பவித்ரோத்ஸவ திருவிழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2025

பெருங்குளம் மாயக்கூத்த பெருமாள் கோவிலில் பவித்ரோத்ஸவ திருவிழா.

பெருங்குளம் மாயக்கூத்த பெருமாள் கோவிலில் பவித்ரோத்ஸவ திருவிழா. 

ஆக. 22 நவதிருப்பதிகளில் ஒன்றான பெருங்குளம் மாயக்கூத்த பெருமாள் கோவிலில் ஐந்து நாட்கள் பவித்ரோத்ஸவ திருவிழா நடைபெறுகிறது. தினசரி நடைபெறும் பூஜைகளில் ஏற்படும் தவறுகளுக்கான பரிகாரமாக ஆண்டு தோறும் பவித்ரோத்ஸவ திருவிழா நடைபெறுகிறது. 

இந்த ஆண்டும் கடந்த மூன்று நாட்கள் பவித்ரோத்ஸவ திருவிழா நடைபெற்றுவருகிறது. மூன்றாம் நாளான இன்று காலை 7.15 மணிக்கு விஸ்வரூபம் .8.15மணிக்கு திருமஞ்சனம் 9 மணிக்கு ஹோமம் நடைபெற்றது. 

பின்னர் 11 மணிக்கு பூர்ணாகுதி 12..45 மணிக்கு திருவாராதனம் நடந்தது. நாலாயிர திவ்யப்பிரபந்தம் அரையர் சம்பத். சாரங்கன்.பட்சிராஜன்.சேஷகிரி ஆகியோர் சேவித்தனர். சாற்றுமுறை நடநது தீர்த்த பிரசாதம் சடாரி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. 

மாலை 5 மணிக்கு சாயரட்சை. 5.30 மணிக்கு உற்சவர் ஸ்வாமி மாயக்கூத்தர் கருட வாகனத்தில் அர்ச்சகர் கோவிந்தன். பாலாஜி ஆகியோர் அலங்காரம் செய்து புறப்பாடு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் மாடவீதி புறப்பாடு நடந்தது. 

இந்நிகழ்ச்சியில் நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன் ஆய்வாளர் நம்பி ஸ்தலத்தார்கள் ஸ்ரீதர். ராமானுஜம் அறங்காவலர் குழுத் தலைவர் அஸ்வின். உறுப்பினர்கள். சுப்பிரமணியன்.உலகம்மாள்.நாகராஜன். பொன்சுந்தர்.. கள்ளப்பிரான் கோயில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad