நெய்வேலி என்எல்சி தலைமை அலுவலகத்தில் பரபரப்பு விவசாயியை தாக்கிய சிஐஎஸ்எப் வீரரை கண்டித்து மக்கள் முற்றுகை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2025

நெய்வேலி என்எல்சி தலைமை அலுவலகத்தில் பரபரப்பு விவசாயியை தாக்கிய சிஐஎஸ்எப் வீரரை கண்டித்து மக்கள் முற்றுகை.


கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இரண்டாம் சுரங்கம் பணிக்காக வளையமாதேவி அம்மன் குப்பம் கறி வெட்டி கத்தாழை ஆகிய கிராமங்களை வீடு நிலங்களை என்எல்சி நிர்வாகம்  கையகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் (45) என்பவர் வயல் பகுதிக்கு சென்றார்.


அப்போது என்எல்சி சுரங்க பாதுகாப்பு பணியில் இருந்த சி.ஐ.எஸ். எப். வீரர் ஜீதேவாஸ் திடீரென சீனிவாசனை கடுமையாக தாக்கி உள்ளார். ஜீதேவாஸ் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்த கிராம மக்கள் சம்பவ இடத்துக்கு வந்து படுகாயமடைந்த சீனிவாசனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் சீனிவாசனை ஏற்ற விடாமல் தடுத்து சி.ஐ.எஸ்.எப் வீரரை கைது செய்யக்கோரி கடந்த 19ஆம் தேதி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்நிலையில் தாக்குதல் அடைந்த சீனிவாசன் மற்றும் வளையமாதேவி அம்மன்குப்பம், கறிவெட்டி, கத்தாழை ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் என்எல்சி தலைமை அலுவலகத்தில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது விவசாய நிலத்திற்கு சென்றவரை  கடந்த 19ஆம் தேதி சி எஸ் எப் வீரர் சீனிவாசனை தாக்கியதில் படுகாயம் அடைந்து ஆனால் இதுவரையில் தாக்குதல் நடத்திய சி எஸ்எப் வீரர் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை மேலும் தாக்குதலில் படுகாயம் அடைந்த சீனிவாசனுக்கு இதுவரை எந்தவிதமான ஆறுதலும் அதிகாரிகள் கூறவில்லை என்பதை கண்டித்து அவர்கள் தற்போது முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad