ஸ்ரீவைகுண்டம் ஆகஸ்ட் 22 தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள நவதிருப்பதி கோவில்களில் 2 வது திருப்பதி யான நத்தம் விஜயாசனப் பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் பௌத்ரோத்ஸவம நடைபெறுவது உண்டு.
கோவில்களில் தினசரி நடைபெறும் பூஜை முறைகளில் ஏதாவது விடுதல்கள் இருப்பின் அதற்கு பரிகாரமாக 😉
பௌத்ரோத்ஸவம் நடத்துவது வழக்கம்.
கடந்த மூன்று நாட்கள் பௌத்ரோத்ஸவம் நடந்தது. இறுதி நாளான இன்று காலை 7.30 மணிக்கு விஸ்வரூபம். 8 மணிக்கு திருமஞ்சனம். 9.30 மணிக்கு சிறப்பு ஹோமம். 11 மணிக்கு பூர்ணாகுதி. நாலாயிர திவ்யப்பிரபந்தம் நடந்தது.
பகல் 1 மணிக்கு சாத்துமுறை. தீர்த்தம். சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு சாயரட்சை. பவுத்திர மாலைகள் படி களையப்பட்டு கோஷ்டி நடந்தது. அட்சதை.தீர்த்தம். சடாரி.பிரசாதம் வழங்கப்பட்டது..
இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் கண்ணன். ராஜகோபாலன் ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி சீனிவாசன். கண்ணன்.அத்யாபகர்கள் திருவாய்மொழி பிள்ளை திருமலாச்சாரி. சீனிவாசன். சம்பத். மதுரகவி. அறங்காவலர் குழுத் தலைவர் அருணாதேவி கொம்பையா.
உறுப்பினர்கள் மாரியம்மாள் சண்முகசுந்தரம். முருகன். முத்துகிருஷ்ணன். பாலகிருஷ்ணன்.நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன் ஆய்வாளர் நம்பி. உட்பட பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக