மணிப்பூரில் மின்சாரம் தாக்கி குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டை சேர்ந்த ராணுவ வீரர் உயிரிழப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2025

மணிப்பூரில் மின்சாரம் தாக்கி குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டை சேர்ந்த ராணுவ வீரர் உயிரிழப்பு.

மணிப்பூரில் மின்சாரம் தாக்கி குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டை சேர்ந்த ராணுவ வீரர் உயிரிழப்பு.

மணிப்பூரில் ராணுவ முகாமில் தற்காலிக கூடாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி குமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்த வைகுந்த் (28) என்ற ராணுவ வீரர் உயிரிழந்தார். 

நவம்பர் மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில், இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் நேற்று  இரவு விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து ராணுவ வாகனத்தில் இன்று (ஆகஸ்ட் 22) வெள்ளிக்கிழமை சொந்த ஊரான திருவிதாங்கோட்டிற்கு கொண்டுவரப்படுகிறது.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். 
என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad