திருப்புவனத்தில் 'உங்களுடைய ஸ்டாலின்' திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் வைகை ஆற்றில் மிதந்த அவலம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2025

திருப்புவனத்தில் 'உங்களுடைய ஸ்டாலின்' திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் வைகை ஆற்றில் மிதந்த அவலம்.

 


திருப்புவனத்தில் 'உங்களுடைய ஸ்டாலின்' திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் வைகை ஆற்றில் மிதந்த அவலம்.


சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்று முடிந்த 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் பெறப்பட்ட சுமார் 50-ற்கும் மேற்பட்ட மனுக்கள் வைகை ஆற்றில் மிதப்பதாக தகவல் அளிக்கப்பட்டது நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வைகை ஆற்றல் மிகுந்த மனுக்களை கைப்பற்றி சென்றனர். 


இந்த அவல நிலை குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் ஆளும் திமுக அரசிற்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாடு பாரதிய ஜனதாவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை "உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் வைகை ஆற்றுக்குள் சென்றது எப்படி? கவர்ச்சியான பெயர்களில் திட்டங்களை அறிவித்தால் மட்டும் போதுமா? உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்களின் நிலைமை என்ன என்பதை திருப்புவனம் வைகை ஆற்றைப் பார்த்தால் தெரிகிறது" என்று விமர்சித்துள்ளார். 


அவரைத் தொடர்ந்து அஇஅதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் "அஸ்தியை கரைப்பது போல் வைகை ஆற்றல் மனுக்கள் கரைக்கப்பட்டுள்ளதாக" விமர்சித்துள்ளார். 


தொடர்ச்சியாக தவெக கொள்கை பரப்பு செயலாளர் அருண் ராஜ் தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.


இத்திட்டத்தின் மூலமாக மனு அளித்த அப்பகுதி பொதுமக்கள் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் திருப்புவனம் வைகை ஆற்றில் மிதந்த அவலநிலை சம்பவம் அறிந்து பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.


மேலும் இச்சம்பவம் தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆகவே பொதுமக்களின் புகார் மனு மீது அலட்சியம் மற்றும் மெத்தனபோக்கு காட்டி அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மீது தமிழ்நாடு அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிரடி நடவடிக்கை எடுக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad