இருவார நிகழ்வுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.(ஆகஸ்ட் 25 முதல்
செப்டம்பர் 08 வரை)
நெல்லை -ஆகஸ்ட்29, உலகம் முழுவதும் சுமார் 40 மில்லியன் மக்கள் பார்வையிழந்தோராக உள்ளனர். அதில் 35 மில்லியன் பார்வையிழந்தோர் நம் இந்தியாவில் உள்ளனர். 1.2 மில்லியன் மக்கள் கருவிழி நோயினால் பார்வையிழந்துள்ளனர். இதே நிலை நீடித்தால்
2026-ம் ஆண்டு 10.6 மில்லியன் மக்கள் கருவிழி நோயினால் பார்வையை இழக்க
நேரிடும்.
இந்த பார்வை இழப்பை தடுக்க ஒரு வருடத்திற்கு சுமார் 1.50 லட்சம் கருவிழிகள் தேவைப்படுகின்றன. இதனை வலியுறுத்தி தேசிய அளவில் தேசிய
கண்தான விழிப்புணர்வு இரு வார நிகழ்வு இந்தியாவில் உள்ள கண் வங்கிகள்
மற்றும் அதை சார்ந்த மருத்துவமனைகள் அனுசரிக்கின்றனர்.
திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் கண் வங்கி இணைந்து 40 -வது தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழா ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர்
08ஆம் தேதி வரை கடைபிடித்து வருகிறது.
இதன் தொடர்பாக கண் தானம் பற்றிய
விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு மனிதச் சங்கிலியை
ஆகஸ்ட் 25-ஆம் தேதியன்று தலைமை விருந்தினராக N. சிலம்பரசன் மாவட்ட
காவல் கண்காணிப்பாளர் திருநெல்வேலி மாவட்டம் மற்றும் சிறப்பு விருந்திர்களாக இந்திய மருத்துவ சங்கதிருநெல்வேலி கிளை
நிர்வாகிகள்தலைவர் டாக்டர் M.முகம்மது அபூபக்கர் , செயலாளர் டாக்டர் M.
பிரபுராஜ்,பொருளாளர் டாக்டர் K. கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு கண்தான
விழிப்புணர்வு வாசகங்களை கூறி தொடங்கி வைத்தார்கள்.
கல்லூரி மாணவ, மாணவியர்கள் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். கண் தானம் குறித்து மாணவ, மாணவியரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும்
வகையில் அவசியம் ஏன்? என்ற தலைப்பில் பள்ளிமாணவ, மாணவியர்களிடையே
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கவிதை மற்றும்ஓவியப்போட்டி
நடத்தப்பட்டது.
ஆகஸ்ட்29 -ம்தேதி நடந்த பாராட்டு விழா நிகழ்ச்சியில் டாக்டர் அகர்வால்
கண் மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர் ராணி லட்சுமி வரவேற்றுப்
பேசினார். டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் மண்டல மருத்துவ
இயக்குனர் பேராசிரியர் டாக்டர் D. லயனல்ராஜ் கருவிழி மாற்று அறுவை சிகிச்சையில் உலகிலேயே திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஆற்றிய சாதனைகள் பற்றியும் கண் தானத்தின் பயன்கள், கண்
தானத்தின் அவசியத்தைக் குறித்து சிறப்புரையாற்றினார். முடிவில் டாக்டர்ஹரிணி நன்றிஉரை கூறினார்.
இந்நிகழ்வை டாக்டர் யாஷிகா தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை
கருவிழிப்பிரிவு மருத்துவர் டாக்டர்.ராணிலட்சுமி, கண்வங்கி ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் மற்றும் மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக