செம்பேடு ஊராட்சியில் முறைகேடு! வட்டார வளர்ச்சி அலுவலர் திட்டம் அவர் களிடம் -வார்டு உறுப்பி னர்கள் புகார்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 4 ஆகஸ்ட், 2025

செம்பேடு ஊராட்சியில் முறைகேடு! வட்டார வளர்ச்சி அலுவலர் திட்டம் அவர் களிடம் -வார்டு உறுப்பி னர்கள் புகார்!

செம்பேடு ஊராட்சியில் முறைகேடு! வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்( திட்டம்) அவர்களிடம் -வார்டு உறுப்பி னர்கள் புகார்!
வேலூர் , ஆகஸ்ட் 4 -

வேலூர் மாவட்டம், வேலூர் ஊராட்சி ஒன் றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (திட்டம் ) வின்சென்ட் ரமேஷ்பாபு அவர்களிடம் 4-07-2025 அன்று செம்பேடு ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் ஈ. மோகனா ஏழும லை, எஸ். முனுசாமி, வி. கோமளா விஜய குமார் ஆகியோர் ஒரு புகார் மனு கொடுத் துள்ளனர். அதில் ஊராட்சி மன்ற தலை வர் கே. அன்பழகன் அனைத்து வேலை களையும் தன்னிச்சையாக செய்து வருகி றார். உங்களுக்கு அந்த அதிகாரம் யார் கொடுத்தது என்று வார்டு உறுப்பினர்கள் கேட்டால் உங்களுக்கு நான்பதில்சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என கூறுகி றார். மேலும் வார்டு உறுப்பினர் அல்லாத திமுக பிரமுகர் பச்சையப்பன் என்பவரை வைத்துக்கொண்டு எல்லாபணிகளையும் செய்து வருகிறார். இந்த பச்சையப்பன் யார் ஊராட்சி மன்ற தலைவரா, உபதலை வரா அல்லது வார்டு உறுப்பினரஇல்லை அப்படி இருக்கையில் இவர் இல்லாமல் எந்த பணிகளும் செய்வதில்லை. ஊரா ட்சி மன்ற தலைவர் கே. அன்பழகன் ஊராட்சி செயலாளர் பி. பாலமுருகன் ஆகியோர் மன்ற கூட்டம் நடக்கும்போது வரவு- செலவு கணக்குகளை முறையாக மன்ற கூட்டத்தில் வைப்பதில்லை. வரவு -செலவு கணக்கில் தன்னிச்சையாகவும், தான் தோன்றித்தனமாகவும் செயல்படு கின்றனர்.28-08-2025 அன்று ஒரு தீர்மா னம் மானம் கொண்டு வந்தார்.9 வார்டு உறுப்பினர்கள் உள்ள நிலையில் 30-08-2025 அன்று 4 வார்டு உறுப்பினர்கள் வைத்துக்கொண்டு அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுகிறார். வராத வார்டு உறுப் பினர்கள் வீட்டிற்கு சென்று கூட்டத்தில் கலந்து கொண்டது போல் கையொப்பம் பெறுகிறார்கள். ஊராட்சிக்கு எந்தப் பணி யில் வந்தாலும் வார்டு உறுப்பினர்களு க்கு தெரியப்படுத்துவதில்லை. இது குறித்து பலமுறை முறையிட்டும் வார்டு உறுப்பினர் நியாயமான கோரிக்கைகளு க்கு ஊராட்சி மன்ற தலைவர் கே. அன்பழ கன் ஊராட்சி செயலாளர் பி. பாலமுரு கன் ஆகியோர் செவி சாய்ப்பது இல்லை. எந்த ஒரு அரசு நிகழ்வு நடந்தாலும் ஊரா ட்சி மன்ற வார்டு உறுப்பினர்களை வைத் து நடத்துவது இல்லை. மக்கள் பிரதிநிதி யாக இல்லாத திமுக பிரமுகர் பச்சையப் பனை வைத்து தான் அனைத்து பணிக ளையும் செய்கின்றனர். இதுகுறித்து ஊராட்சி செயலாளர் பி. பாலமுருகனிடம் தெரிவித்தால் என்னிடம் கேட்காதீர்கள் தலைவரை கேட்டுக் கொள்ளுங்கள் என்றும் மேலும் மரியாதை குறைவாக பேசுகிறார். எனவே வட்டார வளர்ச்சி அலுவலர் (திட்டம் ) அவர்கள் ஊராட்சி மன்ற வரவு- செலவு கணக்குகளையும், நடந்துள்ள திட்ட பணிகளையும் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் இவ்வாறு அவர்கள் கூறியிருந்தனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad