வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் வேர்க்கடலை செடி மற்றும் சேம கிழங்கு செடியுடன் விவசாயிகள் கண்ணீர் மல்க கோரிக்கை!
வேலூர் , ஆகஸ்ட் 4 -
வேலூர் மாவட்டம் தமிழக அரசின் தொ ழிற் மையம் சிப்காட் அமைப்பதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்த அரசு முயற்சிப்பதை கைவிட வலியுறுத்தி அக்கிராம விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் விளைந்த வேர்க்கடலை செடிகள் மற்றும் சேமகிழங்கு செடிகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொ ண்டு கண்ணீர் விட்டு அழுது தமிழக அரசுக்கு கோரிக்கை வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா,மகிமண்டலம் பஞ்சாய த்துக்குட்பட்ட மேட்டுப்பாளையம், தாதி ரெட்டி பள்ளி, அம்மாவார்பள்ளி, பாலமத் தூர், உள்ளிட்ட ஏழுக்கும் மேற்பட்ட கிரா மத்தைச் சேர்ந்த விவசாய பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, அவர்கள் விவசாய நிலத்தில் பயிரிட்டு வளர்த்து வந்த வேர்க்கடலை செடிகள் மற்றும் சேமகிழங்கு செடிகளை கையில் கொண்டு வந்து மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் கண்ணீர் விட்டு அழுதபடி மனு அளிக்க வந்தனர். மேலும், இது குறித்து அப்பகுதி விவசாய பொது மக்கள் கூறுகையில் எங்கள் பகுதியில் எந்த ஒரு முன்னறிவிப்போம் அல்லது முன்னறிவிப்பு கடிதமோ இல்லாமல், சிப்காட் அமைப்பதற்காக அதிகாரிகள் நிலத்தை அளப்பதற்காகவும் கணக்கெடு ப்பதற்காகவும் வருகின்றார்கள், அதற் காக வரும் அதிகாரிகள் அத்துமீறி எங் கள் நிலங்களுக்குள் சென்று மரங்களை கணக்கெடுப்பதும் தோராய நிலங்களை அளப்பதுமாக உள்ளார்கள் நாங்கள் பயிரிட்ட நிலங்களில் சிறப்பு சூ காலுடன் பயிர்களை மிதித்து சேதப்படுத்தி வருகி ன்றனர் எனவும், பலமுறை வரும் அதிகா ரிகளிடம் எதற்கு இந்த வேலையை செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு பெண் களிடம் அவதூறாக பேசி வருகின்றார் கள் மேலும், சிப்காட் அமைப்பதற்கு எங்கள் நிலங்களை அரசு கையகப்படுத் தும் திட்டத்தில் உள்ளது என்பது தெரிய வந்துள்ளது 50 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் செலுத்தி பட்டா நிலத்தில் விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றோம். சிப்காட் நாங்கள் வாழும் கிராமத்தின் அருகாமையில் அமைத்தால் எங்களுக்கு மட்டுமின்றி அருகில் வனப்பகுதியில் வாழும் வனவிலங்கு களும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது எனவே நாங்கள் வாழும் பகுதி விவசாய பகுதி என்பதால் அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கு விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாத நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகையால் எங்கள் பகுதியில் சிப்காட் அமைக்கும் திட்டத்தை உடனடியாக அரசு கைவிட வேண்டும் உயிரே போனாலும் நாங்கள் எங்கள் நிலங்களை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று கிராம விவசாய மக்கள் கண்ணீர் விட்டு அழுது தெரிவித்து வருகின்றனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக