இந்த மாதம் இறுதியில் தொடங்க இருக்கும் அன்னை வேளாங்கண்ணி தேவாலய திருவிழாவிற்கு சிறப்பு ரயில் ஒன்றினை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தக் கோரிக்கையை நிறைவேற்றி தந்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவர்களுக்கு மக்கள் மற்றும் ரயில் பயணிகள் நன்றியினை தெரிவித்துள்ளனர்.
வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை விழா எல்லா வருடமும் ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் எல்லா வருடமும் சென்று வருகின்றனர்.
இதனை ஒட்டி தென்னக ரயில்வே சார்பில் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.
ஆனால் இந்த வருடம் இந்த அறிவிப்பு தாமதம் அடைந்ததை ஒட்டி ரயில் பயணிகள் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவர்களுக்கு இந்த ரயிலை இயக்க முயற்சி மேற்கொள்ளுமாறு கோரிக்கை வைத்தனர்.
அதற்கு ஏற்ப ரயில்வே அதிகாரிகளை தொடர்பு கொண்ட விஜய் வசந்த் அவர்கள் இந்த ரயிலை இயக்க அறிவிப்பு வெளியிடுமாறு கேட்டுக் கொண்டார்.
இன்று ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ரயில் எண் 06115/06116 திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயிலாக இயக்கப்படும் என்ற உத்தரவை வெளியிட்டுள்ளனர்.
இதற்காக வேளாங்கண்ணி ஆலயத்திற்கு செல்லும் மக்கள் மற்றும் ரயில் பயணிகள் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவர்களுக்கு தங்கள் நன்றியினை தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக