கணியம்பாடி அடுத்த வேப்பங்குப்பம் மற்றும் கனி கணியான் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்!!
ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் பங்கேற்பு!!
வேலூர் , ஆகஸ்ட் 19 -
வேலூர் மாவட்டம், கணியம்பாடி வட்டம், கணியம்பாடி அடுத்த கணிக்கனியான் ஊராட்சி குமரன் தனியார் திருமண மண்டபத்தில், கணிக்கனியான் மற்றும் வேப்பங்குப்பம் ஆகிய ஊராட்சிகள் அடங்கிய பொதுமக்களுக்கு, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜன் மற்றும் ஏழுமலை ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகஆற்காடு சட்டமன்ற உறுப்பினர்ஜெ.எல்.ஈஸ்வரப் பன் பங்கேற்று முகாமை பார்வையிட்டு பொதுமக்களுடன் கனிவுடன் கலந்துரை யாடி கோரிக்கை மனுக்களை பெற்று கோரிக்கைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரி களிடம் வழங்கி இணையத்தில் பதிவேற் றம் செய்தனர். இம்முகாமில் ஒன்றிய குழு தலைவர் திவ்யா கமல் பிரசாத், துணைத் தலைவர் கஜேந்திரன் வட்டாட்சி யர் வடிவேலு, வட்டார வளர்ச்சி அலுவலர் கள் ரெகுலர் பி டி ஓ சத்தியமூர்த்தி, திட்ட பி டி ஓ திருமலை, மற்றும் அனைத்து துறைகள் சார்ந்த அலுவலர்கள் பணியா ளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று பதிவேற்றம் செய்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக