கூடலூர் பகுதியில் ஆசிரியர் பற்றாக்குறையினால் பள்ளி மாணவர்கள் அவதி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2025

கூடலூர் பகுதியில் ஆசிரியர் பற்றாக்குறையினால் பள்ளி மாணவர்கள் அவதி


கூடலூர் பகுதியில்  ஆசிரியர் பற்றாக்குறையினால்  பள்ளி மாணவர்கள் அவதி



நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவுக்கு உட்பட்டஅரசு உயர்நிலை பள்ளிகளில் பந்தலூர் , சேரம்பாடி , மண்ணாத்திவயல், கையுண்ணி மற்றும் எருமாடு போன்ற பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையினால் மாணவர்கள் படிப்பதற்கு முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.



பொதுவாக கூடலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளின் வரக்கூடிய ஆசிரியர்கள் பெரும்பாலானோர் கன்னியாகுமாரி திருச்சி சேலம் போன்ற பகுதிகளில் இருந்து வருவதனால்   அவர்களுக்கு இங்குள்ள கால நிலைகள் ஒத்து வராத காரணத்தினால் மிக விரைவாகவே பனி மாறுதல் பெற்று சென்று விடுகின்றார்கள். இதனால் தொடர்ச்சியாக பந்தலூர் சுற்றுவட்டார பகுதியில் இருக்கக்கூடிய அரசு உயர்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்து கொண்டே வருகின்றது.



இதன் காரணமாக எஸ் எம் சி மூலமாக ஆசிரியர்களை தேர்வு செய்து மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகின்றனர். எனவே அவர்களாலும் சில சமயங்களில் முழுமையாக தேர்ச்சி விகிதத்தை தர   முடியாமல் போகின்றது . இதனால் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளியில் பயில கூடிய மாணவர்களின் தேர்ச்சி விகிதமானது குறைந்து வருகின்றது.ஆகவே இனியும் பத்து மாதங்களே மீதம் உள்ள நிலையில் பத்தாம் வகுப்பில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு நிரந்தரமாக அரசு ஆசிரியர்களை நியமனம் செய்து காலியிடங்களை நிரப்பி தருமாறும்   பள்ளி கல்வி துறை அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுத்து இதுக்கு நல்ல ஒரு தீர்வு கிடைக்குமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.  



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad