கொல்லங்குடியில் உள்ள திருக்கோவில்களில் புரவி எடுப்பு விழா மற்றும் பூச்சொரிதல் விழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2025

கொல்லங்குடியில் உள்ள திருக்கோவில்களில் புரவி எடுப்பு விழா மற்றும் பூச்சொரிதல் விழா



கொல்லங்குடியில் உள்ள திருக்கோவில்களில் புரவி எடுப்பு விழா மற்றும் பூச்சொரிதல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.


சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் வட்டம் கொல்லங்குடியில் உள்ள ஸ்ரீ பொய் சொல்லா மெய் அய்யனார் திருக்கோவில் விழாவை முன்னிட்டு புரவி எடுப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. அதேபோல் கொல்லங்குடியில் எழுந்தருளி அருள் பாலித்து வரும், கொல்லங்குடியின் அடையாளமாக திகழ்ந்துவரும், தமிழகம் முழுவதும் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோவிலில் பூச்சொரிதல் விழாவும் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கொல்லங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பக்த கோடி பெருமக்கள், கோயில் கமிட்டி நிர்வாகிகள், அறங்காவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad