அதிமுக மாவட்ட செயலாளரின் தலைமையில் தாய் கழகத்தில் இணைந்த அமமுக கட்சியின் முன்னாள் நகர் கழக செயலாளர்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கழக பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர், புரட்சித் தமிழர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் தலைமையேற்று மானாமதுரை பேரூராட்சியில் இருமுறை வார்டு கவுன்சிலரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முன்னாள் நகர் கழக செயலாளருமான வி. என். சந்திரசேகர் அவர்கள் சிவகங்கை மாவட்ட கழக செயலாளர், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் திரு பி. ஆர். செந்தில்நாதன் அவர்களின் தலைமையில் அவரை நேரில் சந்தித்து, கழக வழக்கறிஞர் திரு சுரேஷ்பாபு அவர்கள் முன்னேற்பாட்டிலும் தாய் கழகத்தில் இணைந்தார். இந்நிகழ்வின்போது சிவகங்கை மாவட்ட கழக இளைஞரணி துணைச் செயலாளர் அசோக் குமார், சிவகங்கை மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் நாகு, இடைக்காட்டூர் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சசிகுமார், கழக வழக்கறிஞர் மணிகண்டன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக