மானாமதுரை பிரதான சாலைகளில் போடப்பட்டுள்ள பேரிகார்டுகளால் விபத்துகளை சந்தித்து வரும் வாகனங்கள், நடவடிக்கை மேற்கொள்ள முன் வருமா போக்குவரத்து காவல்துறை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2025

மானாமதுரை பிரதான சாலைகளில் போடப்பட்டுள்ள பேரிகார்டுகளால் விபத்துகளை சந்தித்து வரும் வாகனங்கள், நடவடிக்கை மேற்கொள்ள முன் வருமா போக்குவரத்து காவல்துறை

 


மானாமதுரை பிரதான சாலைகளில் போடப்பட்டுள்ள பேரிகார்டுகளால் விபத்துகளை சந்தித்து வரும் வாகனங்கள், நடவடிக்கை மேற்கொள்ள முன் வருமா போக்குவரத்து காவல்துறை? 


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சியில் உள்ள பிரதான சாலைகளில் போடப்பட்டுள்ள பேரிக்கார்டுகளால் வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் விபத்து ஏற்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிலரிடம் கேட்டபோது அவர்கள் கூறுகையில், மானாமதுரை நகர் பகுதியில் போடப்பட்டுள்ள பேரிகார்டுகள் ஒவ்வொரு பேரிக்கார்டுகளும் வித்தியாசமாக போடப்பட்டுள்ளதாலும், வித்தியாசமான அளவு மற்றும் வடிவங்களில் இருப்பதாலும் வாகன ஓட்டிகள் குறிப்பாக நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் மானாமதுரை நீதிமன்றம் எதிர்ப்புறம் போடப்பட்ட பேரிக்கார்டுகளில் சமீபத்தில் நான்கு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோபமடைந்து போடப்பட்ட அந்த பேரிகார்டுகளை அகற்றி சாலை ஓரமாக வீசி சென்ற அவலநிலையை பார்க்கும்போது, பொதுமக்கள் எத்தகைய மனநிலையில் உள்ளனர் என்பதை வெளிப்படுத்தியது. ஒருபுறம் மானாமதுரை போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கதாக இருந்தாலும் கூட, சில சமயங்களில் அத்தகைய நடவடிக்கைகள் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே விபரீதமான விபத்துகளை ஏற்ப்படுத்தி வருவதும் வாடிக்கையாகி வருகிறது. எடுத்துக்காட்டாக நீதிமன்றம் எதிர்ப்புறம் போடப்பட்ட சில பேரிகாடுகள் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் செல்லும் பாதையில் இருந்து வரும் வாகனங்கள் எவ்வாறு செல்லும், நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியேறும் வாகனங்கள் எவ்வாறு செல்லும், சமீபத்தில் சிவகங்கை மார்க்கமாக செல்லும் காந்தி சிலை பேருந்து நிறுத்தத்தை நீதிமன்றத்திற்கு எதிர்ப்புறமாக மாற்றியதால் பேருந்து ஓட்டுநர்கள் எவ்வாறு பேரிகார்டுகளையும், வாகனங்களையும் அனுசரித்து நிறுத்துகின்றனர் என்பது போன்ற நுட்பமான விஷயங்களை கருத்தில் கொள்ள தவறியதால் ஏற்பட்ட விளைவுதான் இத்தகைய வாகன ஓட்டிகளின் அசௌகரியங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் விபரீத விபத்துகளுக்கு காரணமாக அமைந்துள்ளது. மற்றொரு நிகழ்வாக நீதிமன்றம் எதிர்ப்புறம் போடப்பட்ட பேட்டி கார்டை ஒட்டி பேருந்துகள் நிறுத்தப்படுவதால் பின்னால் வரும் வாகனங்கள் ஓவர் டெக் செய்வதற்காக பேருந்து மற்றும் பேரிகார்டை தாண்டி செல்லும் வாகனங்கள் எதிரெதிர் திசையில் வரும்போது விபத்துக்குள்ளாகி வருகிறது. ஏன் பேருந்துகளை ஒரு 10 15 அடியோ அல்லது வேகத்தடையை தாண்டியும் நிறுத்த பேருந்து ஓட்டுநர்களும் சிந்திக்கவில்லை காவல்துறையினரும் முன் வரவில்லை? அவ்வாறு செய்திருந்தால் அமெரிக்கா டு நிறுத்தப்பட்ட பேருந்துக்கும் இடையில் வாகனங்கள் சீராக செல்வதற்கு இடம் கிடைத்திருக்கும் அல்லவா. எனவே மானாமதுரை போக்குவரத்து காவல்துறையினர் மிக நுட்பமான கருத்துக்களை கருத்தில் கொண்டு வாகன ஓட்டிகளின் வாகன இயக்கத்திற்கு ஏற்றார்போல் பேரிகார்டுகளை வைக்கும் பட்சத்தில் மற்றும் சாலையோரம் உள்ள வாகன நிறுத்தங்கள் மற்றும் கடைகளின் ஆக்கிரமிப்புகளை சிறிதேனும் சரி செய்து விட்டால் இத்தகைய விபத்துகளை தவிர்க்கலாம் என்பது பொதுமக்களின் கருத்தாக முன்வைக்கப்படுகிறது. அதேபோன்று கல்குறிச்சி ரயில்வே கேட் விளக்கில் போடப்பட்டுள்ள பேரிக்காடுகள் 'ஜிக்ஜாக்' முறையில் சரியாக போடப்படாததாலும் கல்குறிச்சி ரயில் பாதை வழியாக வரும் வாகனங்கள் இடதுபுறம் வலதுபுறம் செல்லும்போது சிறிது கவனம் சிதறினாலும் மரணம் உறுதி என்பது போன்று பேரிக்காடுகள் போடப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக நகராட்சி அலுவலகம், சந்தை கடை பகுதியில் போடப்பட்டுள்ள பேரிக்காடுகள் வாகனம் இயங்குவதில் தடைகளையும், சிக்கல்களையும் பேரிக்காடுகள் போடப்பட்ட நாள் முதல் சந்தித்து வருகிறது. பேரிக்கார்டுகள் போடுவதால் சீரான போக்குவரத்து ஏற்படுவது உண்மைதான், வேறு கார்டுகள் போடப்படுவதால் காவலர்கள் இல்லை என்றாலும் மட்டும்தான் போக்குவரத்து தாமாகவே சீராகிவிடும் என்றாலும் கூட பேரிக்காடுகள் போடப்பட்ட பிறகு வாகனங்களின் நீலம் மற்றும் அகலத்திற்கேற்ப சாலை ஓரங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள், ஆக்கிரமிப்புகளை தடுக்காமல், அகற்றாமல் எவ்வாறு வாகனங்கள் சீராக இயங்கும் என்பதை சிறிது நேரம் சிந்தித்துப் பார்க்க வேண்டுமென்றும் மானாமதுரை போக்குவரத்து காவல்துறைக்கு பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். எனவே உடனடியாக பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களை கவனத்தில் கொண்டு, ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட அவசர வாகனங்களுக்கு இடையூறு ஏற்பட்டு விடாத வண்ணம், மானாமதுரை பிரதான சாலைகளில் இடப்பட்டுள்ள பேரிகாடுகளை நெடுஞ்சாலைதுறை மற்றும் பொதுப்பணித்துறையில் உள்ள பொறியாளர்களின் முறையான ஆலோசனைகளை பின்பற்றி போக்குவரத்து காவல்துறையினர் பேரிகார்டுகள் மற்றும் போக்குவரத்து இயக்கங்களை சரி செய்திட முன்வர வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad