கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் தரையில் கொட்டி அழிக்கப்பட்ட மது பாட்டில்கள் - மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை.
79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று தமிழக முழுவதும் உள்ள அனைத்து விதமான மதுபான கடைகளுக்கும் அரசு விடுமுறை அளித்துள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்களை கடத்தி தமிழக பகுதியில் விற்பனை செய்வதை தடுக்க கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆல்பேட்டை சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது புதுச்சேரியில் இருந்து பேருந்து, கார், ஷேர் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் கடத்தி வரப்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்து அங்கேயே தரையில் கொட்டி அழித்தனர். தொடர்ந்து மது கடத்தலில் ஈடுபட்டவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக