நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் பகுதியில் 27 வது வார்டில் கழிவு நீர் கால்வாய் அடைபட்டு கழிவுநீர் நடை பாதையில் செல்வதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்.
உதகை காந்தல் பகுதியில் 27 வது வார்டில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு மாதங்கள் ஆகியும் இந்த வார்டில் நகராட்சி உறுப்பினராக உள்ள பிரியா என்பவரிடம் பலமுறை கூறியும் அவரை அழைத்து வந்து நேரில் காண்பித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை கால்வாயில் எலி தொல்லையும் அதிக அளவில் குழிதோண்டி வைத்து கால்வாய் நீர் முழுவதும் அங்குள்ள வீடுகளின் உள்ளே செல்கின்றது இதனால் கொசு தொந்தரவும் அதிக அளவில் உள்ளது அங்குள்ளவர்கள் வீடுகளில் கதவை கூட திறக்க முடியாமல் அடைத்து வைத்திருக்கின்றனர் இதற்கு நகராட்சி அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திக்காக செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக