திருடப்பட்ட 11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்- தனியார் கல்லூரி மாணவன் உட்பட இருவர் கைது- போலீசார் விசாரணை!
குடியாத்தம் , ஆகஸ்ட் 16 -
குடியாத்தம் பகுதியில் திருடப்பட்ட 11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்- தனியார் கல்லூரி மாணவன் உட்பட இருவர் கைது- போலீசார் விசாரணை
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகன திருட்டு நடைபெற்று வந்தது இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்த ரவின்பேரில் குடியாத்தம் போலீசார்
குடியாத்தம் அரசு மருத்துவமனை மற் றும் அரசு டாஸ்மாக் மதுபான கடை பகுதி களில் தீவிர கண்காணிப்பில்ஈடுபட்டனர்
இதனிடையே பாக்கம் அரசுமதுபானகடை அருகே இருசக்கர வாகனத்தை திருட முயன்ற இருவரை காவல்துறையினர் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற் கொண்ட போது அவர் கள் குடியாத்தம் அரசு மருத்துவமனை மற்றும் அரசு மதுபான கடை பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் திருட் டில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது
அவர்கள் குடியாத்தம் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வரும் தட்டப்பாறை பகுதியை சேர்ந்த கோகுல்நாத் (வயது 20) மற்றும் அவரது உறவினர் சுப்பிரமணி (வயது 47) என்பதும் தெரிய வந்தது இதனையடுத்து இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 11 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர் மேலும் இதைக் குறித்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக