தேசிய விளையாட்டு தினத்தினை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா
நீலகிரி மாவட்டம் கூடலூர் சரஸ் உள் விளையாட்டு அரங்கத்தில் இன்று தேசிய விளையாட்டு தினத்தினை முன்னிட்டு சரஸ் அறக்கட்டளை மற்றும் மேரா யுவா பாரத் சார்பில் சரஸ் அறக்கட்டளை வளாகத்தில் பூப்பந்து மற்றும் கேரம்ஸ் விளையாட்டுகள் நடைபெற்ற பங்கேற்ற மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு பரிசுகளாக சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டன.
சிறப்பு விருந்தினர்களாக நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் சுரேஷ் ரமணா, கூடலூர் நகர ஒருங்கிணைப்பாளர் திரு. லாரன்ஸ், உதகை நகர ஒருங்கிணைப்பாளர் திரு.ஜாபர் ப்ளூ ஹில்ஸ் அறக்கட்டளை நிர்வாகி திரு அம்சா நீலகிரி கல்வி அறக்கட்டளை மோசஸ் கலந்து கொண்டனர்.
போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மேரா யுவபாரத் நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித் மற்றும் சரஸ் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக